JobVibe.lk - Sri Lanka Job Portal

பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் நினைவுப் பேருரை நிகழ்த்த தமிழ்நாடு அமைச்சர் சாஜஹான் இலங்கை வருகை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்துடன் இணைந்ததாக, கட்சியின் பேராளர் மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கு தமிழக சட்டமன்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال