JobVibe.lk - Sri Lanka Job Portal

கரப்பந்தாட்ட தொடரில் கமர்தீன் போய்ஸ் அணி சம்பியனாக தெரிவானது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ரத்மல்யாய பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து மிகக் கோலாகலமாக ஏற்பாடு செய்த இரவு நேர கரப்பந்தாட்ட தொடரில் கமர்தீன்  போய்ஸ் அணி 15 : 13 புள்ளிகளில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது.

தொடரின் இரண்டாம் இடத்தினை அல் ஜஸீரா அணி பெற்றுக்கொண்டது.

பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம். கியாஸ் தலைமையில், ரத்மல்யாய இளைஞர்கள் ஒன்றியத்தின் மிகச் சிறப்பான ஏற்பாட்டில் ரத்மல்யாய கரப்பந்தாட்ட மைதானத்தில் இப்போட்டி தொடர் இடம்பெற்றது.

மொத்தமாக 13 அணிகள் தொடரில் பங்கேற்றிருந்தன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் , மாநகர சபை உறுப்பினர்களான இப்லால் அமீன், சஹ்ரான் தாஜுதீன், பிரஜா சக்தி உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال