JobVibe.lk - Sri Lanka Job Portal

வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 1600 உடன் நபர் ஒருவர் அம்பாந்தோட்டையில் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படை, அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காகத் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர்,  செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் 01) கைது செய்யப்பட்டார்.

தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் (01) சோதனைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக 1,600 வெளிநாட்டுச் சிகரெட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 20 வயதுடைய அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், அந்தச் சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டுச் சிகரெட் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال