JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை...!.

 (புத்தளம் எம். யூ. எம். சனூன்)

அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சமீரகம முஸ்லிம் வித்தியாலய  மாணவர்கள் புத்தளம் தெற்கு கோட்ட மட்டத்தில் பாரிய சாதனையை அடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம். எம். எம். மிஹ்லார் (நளீமி) தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகளின் வரிசையில் முதலாம் இடத்தையும், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வரிசையில் இரண்டாம் இடத்தையும், புத்தளம்  தெற்கு கோட்ட மட்ட பாடசாலைகளின் வரிசையில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வளப்பற்றாக்குறை இருக்கும் இந்த பாடசாலை கல்வி வளர்ச்சியில் பாரிய சாதனைகளை படைத்தமையிட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கின்றது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال