JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடற்படை மரபுகளுக்கு அமைவாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டளையின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய அவர்களால் கட்டளைத் தலைமையகத்தில் வைத்து கட்டளையின் பொறுப்புகள் புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மேலும், ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாகவும் (Deputy Chief of Staff) கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال