(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளரும், “தந்தை அமீர்” எனப் போற்றப்பட்டவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவை முன்னிட்டு, கொழும்பிலுள்ள கத்தார் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் அமேசான் காலேஜ் மற்றும் கேம்பஸ் நிறுவனர் இல்ஹாம் மரைக்கார் கையொப்பமிட்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அவரது மறைவு கத்தார் மக்களுக்கு மட்டுமன்றி, அவரை மதித்திருந்த பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் பெரும் இழப்பாகும் என அஞ்சலி செலுத்தியவர்கள் தெரிவித்தனர்.
ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்கள் கத்தாரின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மனிதநேயப் பணிகளில் முக்கிய பங்காற்றிய தலைவராக நினைவுகூரப்பட்டார்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை வாலிபர் முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய தலைவர் ஷாம் நவாஸ் மற்றும் சர்வ மத அமைப்பின் பிரதிநிதி மவுலவி முஜீப் ஆகியோரும் கலந்துகொண்டு இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

