JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படை தளபதி பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக வியாழக்கிழமை (2026 ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

பாரம்பரியமிக்க இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27 வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமைக்காக கௌரவ பிரதமர் அவர்கள், கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும்  நாட்டின் கடல்சார் பாதுகாப்பை  உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை ஆற்றும் தனித்துவமான பங்களிப்பு குறித்து இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான மற்றும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படை தளபதியினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال