JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரின் மாற்றுத்திறனாளியான இரு கண்களும் பார்வையிழந்த சலீம் கான் வடமேல் மாகாணத்தில் சாதனை.

எம்.யூ.எம்.சனூன்

வடமேல் மாகாண சமூக சேவை பிரிவினால் பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான, அதிலும் குறிப்பாக விழிப்புலன் அற்றவர்களுக்கான பாடல் இசைக்கும் போட்டியில் புத்தளம் நகரின் மாற்றுத்திறனாளியான சலீம் கான் என அழைக்கப்படுகின்ற ஏ.ஆர்.எம். நாசிம் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதித்து காட்டி இருக்கின்றார்.

இதன் மூலமாக இவர் அடுத்து வருகின்ற அகில இலங்கை ரீதியான மாற்றுத்திறனாளிகளுக்கான பாடல் இசைக்கும் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றார்.

பிறவியிலேயே இரு கண்களும் பார்வை இழந்திருந்த இவர் புத்தளம் மாநகர சபையின் சவீவபுரம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

பல்வேறு பிரபலங்களின் பேச்சுத்திறன்களை அவரவரின் குரல்களின் பாணியிலேயே ஒப்புவிக்கும் திறமை வாய்ந்த இவர் புத்தளம் நகரின் ஒரு பிரபலமான அறிவிப்பாளர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال