JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா மீண்டும் சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிண்ணியா  மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டு பிரிவுகளிலும் முதலாம் நிலையைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு, கல்முனை ஸாஹிரா சாதனை வரலாற்றை மீண்டும் புதுப்பித்து,  தடம்பதித்துள்ளது. 

மேலும் நடைபெற்ற பேட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு தனியாள் Board Champion ஆக கல்முனை ஸாஹிராக் கல்லூரின் 17வயதுக்கு உட்பட்ட அணியின் ஏ. அர்ஹம் பர்வீஸ் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட எம். இஸட்.எம். சனீப், ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத், ஜே.எம். இஸ்ஸத் சஹ்மி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 

வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்குத் தெரிவான மாணவர்களையும், இம் மாணவர்களை போட்டிக்காக பயிற்சியளித்து அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர் எம்.வை.எம். றகீப், கல்லூரியின் சதுரங்க பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.எம். சுஹ்தான் மற்றும் ஆசிரியர் எச்.எம். ஜெமீன் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீ்ர் (SLEAS) இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ்.முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال