பல்வேறு முறைகேடுகள் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்களுடனான தொடர்புகளில் ஈடுபட்டதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மற்றவர்கள் கடமையில் அலட்சியம் காட்டியது மற்றும் இலஞ்சம் வாங்கியது போன்ற காரணங்களுக்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
