புதிய விடியலைத் தரும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்பான புத்தளம் மாவட்ட மற்றும் தேசத்து இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஹிஜ்ரி 1448 முஹர்ரம் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தியாகம், பொறுமை மற்றும் நீதியின் அடையாளமாக விளங்கும் இந்த முஹர்ரம் மாதத்தில், நம் வாழ்வில் அமைதியும், வளமும், ஆரோக்கியமும் பெருகிட பிரார்த்திக்கின்றேன்.
கடந்த கால சவால்களைக் கடந்து, புதிய எதிர்பார்ப்புகளுடனும் ஒற்றுமையுடனும் எமது மாவட்டத்தினதும், நாட்டினதும் அபிவிருத்தியை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
இந்தப்புதிய ஆண்டு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இறை அருளையும் கொண்டு வரட்டும்!
"அனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துகள்!"
