JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி - கனமூலை சித்தீக் சர்வதேச அகடமியில் மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் 100 வீத சித்தி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மதுரங்குளி கனமூலை சித்தீக் சர்வதேச அகடமியில் மத்ரஸா 14 மாணவர்கள்  இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை க்கு தோற்றி சகல மாணவர்களும் சித்தியடைந்து ( 100 சதவீதம்)  உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

அதன்படி றியாஸ்தீன் முஸாப் - 5 ஏ, 1 பீ, 3 சீ, இமாம்தீன் இன்பஹாத் - 3 ஏ, 4 பீ, 1 சீ, 1 எஸ், றம்சீன் மொஹம்மத் அம்ஜத் - 3 ஏ, 2 சீ, 4 எஸ் சித்திகளை பெற்றுள்ளனர். மேலும் பாடரீதியாக இஸ்லாம், தமிழ், கணிதம், அரபு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 100 வீத சித்திகளையும் விஞ்ஞானம், வரலாறு, அரபு இலக்கணம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் 92 சதவீத சித்திகளையும் ஆங்கில பாடத்தில் 78 சதவீத சித்திகளையும் பெற்று சித்தீக் சர்வதேச அகடமிக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதன் பணிப்பாளர் சபை உறுப்பினரும், முன்னாள் அதிபருமான ஓய்வு பெற்ற அஷ்ஷெய்க் இஸட். ஏ. சன்ஹிர் (கபூரி) தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال