கற்பிட்டி பிரதேசத்தில் மண் விற்பனை மாஃபியா கும்பலின் மூன்று டிப்பர் வாகனங்களும் சாரதிகள் மூவரும் மணலுடன் பொலிஸாரினால் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விற்பனையில் ஈடுபட்டு வரும் மண் விற்பனை மாஃபியா கும்பலை மடக்கிய கற்பிட்டி பொலிஸார்
இதன்படி கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பிரன்ஸிஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் சனிக்கிழமை (23) கற்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விற்பனையில் ஈடுபட்டு வரும் மண் மாஃபியா கும்பலின் மூன்று டிப்பர் வாகனங்களை மணலுடன் கைப்பற்றியதுடன் அதன் சாரதிகள் மூவரையும் கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்
இதில் ஒரு டிப்பர் வாகனம் மணல் விநியோகத்திற்கு செல்லும் வழியிலும் ஏனைய இரு வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையிலும் கற்பிட்டி பொலிஸ் குழு கைப்பற்றிய தாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததுடன் மணலுடன் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் சாரதிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments