Breaking News

கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் தே.ம.சக்தியினருடனான விஷேட கலந்துரையாடல்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி உதார தலைமையில் செவ்வாய்க்கிழமை (24); இடம்பெற்றது 


இதில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ், கற்பிட்டி பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் சிவா, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள் உட்பட தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா தொடர்பாகவும் , வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களின் தேவைப்பாடு, தாதிகளுடன் சேர்ந்த ஆளணி பற்றாக்குறை  மற்றும் குறைபாடுகள் அவசரமாக மேற்க் கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் முக்கியமாக மகப்பேற்று வைத்திய அதிகாரியின் அவசர தேவைப்பாடு என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்  முதற்கட்டமாக வாரத்திற்கு ஒருமுறை  இணைப்பு சேவை அடிப்படையில் மகப்பேற்று வைத்திய அதிகாரின் சேவையை கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு பெற்றுக் கொள்வதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளருக்கு வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினரால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments