JobVibe.lk - Sri Lanka Job Portal

கனமூலை ராபிதா நலன்புரி அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கனமூலை *ராபிதா நலன்புரி அமைப்பின்*  ஏற்பாட்டில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வரிய மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 09/01/2026 ஆம் திகதி கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக அதிபர்கள், ஆசிரியர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், இயற்கை அனர்த்தங்களால் மாணவர்களின் கல்விப் பயணம் எவ்விதத்திலும் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதனைச் சுட்டிக்காட்டியதுடன், இக்கட்டான சூழலில் ராபிதா நலன்புரி அமைப்பு முன்னின்று உழைப்பதையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், கல்வியைத் தொடர்வதற்கான ஊக்கத்தையும் அளிப்பதே இந்த மனிதாபிமான முயற்சியின் பிரதான நோக்கமாகும் என அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


நிகழ்வின் நிறைவில், இந்நிகழ்வை சிறப்பாக செய்ய உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு இப்பகுதி மக்களின் நலன் சார்ந்த பணிகளிலும், கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளிலும் ராபிதா நலன்புரி அமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பயணிக்கும் என்ற உறுதிமொழியும் மீள வலியுறுத்தப்பட்டது.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال