Breaking News

சோட்டோக்கான் கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்தை நிரூபித்தால் பத்து லட்சம் பணம் சன்மானமாக வழங்கப்படும்.

விளையாட்டுக் கழகங்கள் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுபோல் கராத்தே சங்கங்கள் ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தில் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்ரீ லங்கா கராத்தே தோ  சம்மேளனமானது விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் உள்ள ஒரு தேசிய சம்மேளனமாகும். இது குறித்த கழகங்களுக்கும், சங்கங்களுக்கும், சம்மேளனத்துக்கும் உள்ள அங்கீகாரத்தினை குறிக்கின்றது. 


ஆனால் சோட்டோக்கான் கராத்தே சம்மேளனமானது எங்கே பதியப்பட்டுள்ளது ? எதில் இணைக்கப்பட்டுள்ளது ? நாலு பேர் சேர்ந்தால் அது சம்மேளனமாகுமா ? என்பதுதான் எனது கேள்வியாகும். 


நல்ல நோக்கத்துக்காகத்தான் சோட்டோக்கான் சம்மேளனம் உருவாக்கப்பட்டது. அதனாலேயே நாங்களும் கடந்த காலங்களில் அதனுடன் இணைந்து செயற்பட்டோம். ஆனால் இதுவரையில் அதற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இலங்கையில் அங்கீகாரமுள்ள கராத்தே “”சம்மேளனம்”” என்றால் ஒன்றுதான். அதுதான் ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம். 


இன்று சொட்டோக்கான் கராத்தே சம்மேளனம் என்று பெரும் எடுப்பில் விளம்பரம் செய்துகொண்டு அப்பாவி மாணவர்களையும், பெற்றார்களையும் ஏமாற்றி குருநாகலையை சேர்ந்த வெள்ளைத் தம்பியின் பதக்கங்கள் விற்பனை செய்கின்ற கடைக்கு பெருத்த வியாபாரத்தை ஏற்படுத்தி அவரை பணக்காரராக மாற்றியுள்ளனர். 


வெள்ளைத்தம்பி பணக்காரர் ஆனால் இங்குள்ள சில கிழட்டு நரிகள் கோட் போட்டு, டையும் கட்டி, குத்துவிளக்கு ஏற்றி விளம்பரப்படுத்தி பெருமையடைந்து கொள்வதுடன், கராத்தே பயிற்சி வகுப்புக்கு புதிய மாணவர்களை சேர்த்து பணம் சம்பாதிப்பதற்கான விளம்பரமாக பயன்படுத்துகின்றனர்.  


எதுவும் அறியாத அப்பாவி மாணவர்களும், பெற்றார்களும் பணத்தை செலவழித்து அதில் கிடைத்த பதக்கங்களை காண்பித்து தாங்கள் சாதனை செய்துள்ளதாக நம்பிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். 


இந்த போட்டியில் கலந்துகொண்டவர்களில் பதக்கம் பெறாதவர்கள் எவருமில்லை என்பதனையும், அங்கீகாரம் இல்லாத ஒரு அமைப்பினால் வழங்கப்படுகின்ற பதக்கமும், சான்றிதள்களும் ஒருபோதும் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதனையும் அறிந்துகொள்கின்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. இந்த உண்மையை அவர்களது போதனாசிரியர்கள் கூறவுமாட்டார்கள். அவ்வாறு கூறினால் சாயம் வெளுத்துவிடும் என்பது அவர்களது நிலைப்பாடு. 


அங்கீகாரமில்லாத இந்த பதக்கங்களையும், சான்றிதழையும் நேர்முக பரீட்சைக்கு எடுத்துச் சென்றால் அதனை குப்பைக் கூடைக்குள் வீசிவிடுவார்கள். இந்த போட்டிகளை ஒரு பயிற்சி போட்டியாக (Practice) பயன்படுத்தலாமே தவிர வேறு ஒன்றுமில்லை. 


எனவேதான் சோட்டோக்கான் கராத்தே சம்மேளனம் என்பது எந்தவொரு அங்கீகாரமும் இல்லாத ஒரு குழு. இதனை யாராவது அங்கீகாரம் உளதென்று வாதிட்டால், அதன் அங்கீகாரத்தினை நிரூபியுங்கள். அவ்வாறு நிரூபித்தால் உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும்.  


முகம்மத் இக்பால் 

பிரதம கராத்தே போதனாசிரியர்


ෂෝටෝකන් කරාතේ සම්මේලනයේ පිළිගැනීම ඔප්පු වුවහොත් රුපියල් මිලියනයක ත්‍යාගයක් ලබා දෙනු ලැබේ.


ක්‍රීඩා සමාජ පළාත් ක්‍රීඩා දෙපාර්තමේන්තුවේ ලියාපදිංචි කර ඇත. ඒ හා සමානව, කරාතේ සමාජ ශ්‍රී ලංකා කරාතේ සම්මේලනයට අනුබද්ධ වේ. ශ්‍රී ලංකා කරාතේ සම්මේලනය ක්‍රීඩා අමාත්‍යාංශය යටතේ ඇති ජාතික සම්මේලනයකි. මෙයින් පෙන්නුම් කරන්නේ අදාළ සමාජ, සංගම් සහ සම්මේලන පිළිගැනීමයි.


නමුත් ෂෝටෝකන් කරාතේ සම්මේලනය ලියාපදිංචි කර ඇත්තේ කොහේද? එය අනුබද්ධ වන්නේ කුමක් සමඟද? හතර දෙනෙකු සම්බන්ධ වුවහොත් එය සම්මේලනයක් බවට පත්වේවිද? මගේ ප්‍රශ්නය.


ෂෝටෝකන් සම්මේලනය හොඳ අරමුණක් සඳහා පිහිටුවා ඇත. ඒ නිසා අපි අතීතයේ දී එය සමඟ ද වැඩ කර ඇත්තෙමු. නමුත් මෙතෙක් එය නිල වශයෙන් පිළිගෙන නොමැත. ශ්‍රී ලංකාවේ ඇත්තේ එක් පිළිගත් කරාතේ “සංගමයක්” පමණි. ඒ ශ්‍රී ලංකා කරාතේ සම්මේලනයයි.


අද වන විට, ඔවුන් කුරුණෑගල සුදු මල්ලි මහතාගේ පදක්කම් ෂෝටෝකන් කරාතේ සම්මේලනය ලෙස මහා පරිමාණයෙන් ප්‍රචාරය කිරීමෙන් සහ ඔහු ධනවත් කිරීමෙන් විශාල ව්‍යාපාරයක් කර ඇත.


සුදු අයියා පොහොසත් නමුත් මෙහි සිටින සමහර නාකි හිවලුන් කබා, ටයි පටි පැළඳගෙන ලන්තෑරුම් දල්වා එය ප්‍රචාරය කිරීමෙන් තමන් ගැන ආඩම්බර වන අතර, කරාටේ පුහුණු පන්ති සඳහා නව සිසුන් බඳවා ගැනීමට සහ මුදල් උපයා ගැනීමට ඔවුන් එය දැන්වීමක් ලෙස භාවිතා කරයි.


කිසිවක් නොදන්නා අහිංසක සිසුන් සහ දෙමාපියන් මුදල් වියදම් කර තමන් දිනූ පදක්කම් පෙන්වමින්, තමන් යමක් ලබා ඇති බව විශ්වාස කරමින්, එය සමාජ මාධ්‍යවල පළ කරති.


මෙම තරඟයට සහභාගී වූවන් අතර පදක්කමක් දිනා නොගත් කිසිවෙකු නොමැති බවත්, පිළිගැනීමක් නොමැති සංවිධානයක් විසින් පිරිනමනු ලබන පදක්කම් සහ සහතික කිසි විටෙකත් ජයග්‍රහණයක් ලෙස පිළි නොගන්නා බවත් තේරුම් ගැනීමට ඔවුන්ට හැකියාවක් නැත. ඔවුන්ගේ ගුරුවරුන් මෙම සත්‍යය පවා නොකියනු ඇත. ඔවුන් එසේ පැවසුවහොත්, සායම් මැකී යනු ඇත.


ඔබ මෙම හඳුනා නොගත් පදක්කම් සහ සහතික සම්මුඛ පරීක්ෂණයට ගෙන ගියහොත්, ඒවා කුණු කූඩයට දමනු ලැබේ. මෙම තරඟ භාවිතා කළ හැක්කේ පුහුණු තරඟයක් ලෙස පමණි.


ෂෝටෝකන් කරාතේ සම්මේලනය හඳුනා නොගත් සංවිධානයක් වන්නේ එබැවිනි. මෙය පිළිගත් සංවිධානයක් බව යමෙකු ප්‍රකාශ කරන්නේ නම්, එහි පිළිගැනීම ඔප්පු කරන්න. ඔබ එය ඔප්පු කළහොත්, ඔබට රුපියල් මිලියනයක මුදල් ත්‍යාගයක් ලබා දෙනු ඇත.


සටහන: මා මෙහි සඳහන් කළේ “ෂෝටෝකන් සම්මේලනය” ගැන ය. “ෂෝටෝකන් කරාතේ සංගම්” ගැන නොවේ.


මුහම්මද් ඉක්බාල්

ප්‍රධාන කරාතේ උපදේශක




No comments