JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரபீகா (பஸீனா) அவர்கள் காலமானார்

விருதோடையை   பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும்களான அப்துல் ரசீது , லைலா உம்மா ஆகியோரின் அன்பு மகள் ரபீகா (பஸீனா) அவர்கள் இன்று (08) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் அல்-ஹாஜ் கலீல் அவர்களின் அன்பு மனைவியும், றிம்சான்;, றிஸ்மியா, றிஸ்கா ஆகியோரின் அன்புத் தாயும், இப்ஹாம், றினாஸ், பஸ்லினா ஆகியோரின் மாமியாரும், ரசீபா,    றபாய்தீன், றபாத் அமீன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (09) காலை 08 மணியளவில் விருதோடை ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


தகவல்,

றபாத் அமீன்.

முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال