Breaking News

முதுகெலும்பு இல்லாத கராத்தே போதனாசிரியர்கள் ? ஏன் ?

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம் கடந்த காலங்களில் நடாத்திய தேசிய, மாகாணம், மாவட்டம் மற்றும் ஏனைய அனைத்து கராத்தே போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கு ஒரே வகையான பதக்கங்களை வழங்கியுள்ளனர். 


இது பற்றி யாராவது சிந்தித்தீர்களா ?  


அதாவது பதக்கத்தின் ஒரு பக்கத்தில் கராத்தே சம்மேளனத்தின் (LOGO) இலட்சினையும், மறுபக்கத்தில் KARATE CHAMPIONSHIP, SRI LANKA KARATE DO FEDERATION என்ற வாசகம் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. (இங்கே அதன் படத்தினை பதிவிட்டுள்ளேன்)  


பதக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு “KARATE CHAMPIONSHIP” என்று குறிப்பிடுவதென்றால், எந்தவகையான கராத்தே போட்டி ? 


பதக்கங்களில் போட்டி நடைபெற்ற ஆண்டு, தேசிய போட்டியா ? மாகாண போட்டியா ? மாவட்ட போட்டியா ? என்பது பற்றி குறிப்பிடப்படல் வேண்டும். ஆனால் இவைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 


அவ்வாறு குறிப்பிட்டால் ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு பதக்கங்களை வழங்க வேண்டி ஏற்படும். அவ்வாறு செய்தால் வியாபார ரீதியில் அதிகமான பணம் சம்பாதிக்க முடியாது என்பதுதான் இதற்கான காரணமாகும். 


இலங்கையில் உள்ள கராத்தே போதனாசிரியர்களும், மாணவர்களும் முட்டாள்கள் என்று நினைத்ததன் காரணமாகவே “KARATE CHAMPIONSHIP” என்று மாத்திரம் பதக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.      


National Player ஒருவர், பல வகையான போட்டிகளில் கலந்துகொண்டு ஒரே வகையான பதக்கங்களை பெறுகின்றபோது எந்த பதக்கம் எந்த ஆண்டில், எந்த போட்டியில் பெற்றுக்கொண்டது என்பது பற்றி ஒரு வீரரால் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் ?    


இது பற்றி ஆராய்ந்தபோது சம்மேளன நிருவாகிகளில் ஒருவரான குருநாகலையை சேர்ந்த வெள்ளத் தம்பியினால் சீனா நாட்டிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு மொத்தமாக ஒரு கெண்டேனர் பதக்கங்கள் இறக்குமதி செய்ததாக தகவல் கிடைத்தது.


பத்து வருடங்களாக கராத்தே சம்மேளனத்தின் முழு அதிகாரமும் குறிப்பிட்ட வெள்ளத் தம்பியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இவர் சம்மேளனம் மூலமாக குறுக்கு வழிகளில் பல கோடிகள் பணம் சம்பாதித்துள்ளார். 


அதிகாரத்தை தக்கவைப்பதற்காக அவர் செய்துவருகின்ற குறுக்கு வழிகள், தில்லு முள்ளு வேலைகள், தனக்கு போட்டியானவர்களை ஓரம்கட்டுதல், கடைக்கு போகும் வேலை, காலில் விழுதல் மற்றும் கூட்டிக் கொடுக்கும் மாமா வேலைகள் போன்றவற்றை மிகவும் தந்திரமாக செய்வதில் அவர் மிகவும் கெட்டிக்காரர். 


அத்துடன் வெள்ளத் தம்பியின் சப்பாத்தை நக்குகின்ற சிலர் வடக்கு, கிழக்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


இந்த வெள்ளைத் தம்பி மிகவும் தந்திரமாக ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் அதிகாரத்தை கைப்பற்றியதுடன், அனைத்து மாவட்டங்களிலும் இவரது தலையீடுகள் அதிகமாக உள்ளது.  


இலங்கை தேசிய கராத்தே அணியினர் 2016 இல் இருந்து இன்று வரைக்கும் வெள்ளைத் தம்பி இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்றதில்லை. அதாவது வெள்ளைத் தம்பி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  


கடந்த ஆண்டு கொமன்வெல்த் போட்டிக்காக லண்டன் சென்றபோது அவர் நாடு கடத்தப்பட்ட விடயமும், ஊழல் விசாரணைக்காக CID க்கு சென்றுவந்த விடயமும் யாவரும் அறிந்தது.   


தலைவரது ரகசியங்கள் அனைத்தும் இவரிடம் உள்ளதனால் வெள்ளைத் தம்பி கூருகின்றவற்றுக்கு மறு பேச்சு இல்லாமல் தலைவர் தலையாட்டிக்கொண்டு இருக்கின்றார்.  


அத்துடன் பொது அறிவில்லாத முட்டாள்கள் நிறைந்த சோட்டோக்கான் கராத்தே சம்மேளனத்தையும் கைப்பற்றிவிட்டார். அடுத்தது தேசிய சம்மேளனத்தின் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் தகுதியானவர்கள் பலரும் வாய் மூடி மௌனியாக இருக்கின்றனர்.    


எனவே வெள்ளைத் தம்பி போன்றவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்காக இலங்கை கராத்தேயின் புனிதமும், கௌரவமும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. இதனை தட்டிக் கேட்பதற்கு இலங்கையில் உள்ள எந்த கராத்தே போதனாசிரியர்களும் முன்வராததன் காரணமாக அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டியுள்ளது. 


முகம்மத் இக்பால் 

பிரதம கராத்தே போதனாசிரியர்




No comments