JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை ஆரம்பித்திருக்கின்றது.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகரில் பாதசாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்படுகின்ற கடைகள், நடை பாதை வியாபார நிலையங்கள் மற்றும் நடைபாதையில் காணப்படும் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது புத்தளம் மாநகர சபை ஆரம்பித்திருக்கின்றது.


புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாட் அஹமட் அவர்களின் பணிப்பின் பேரில் புத்தளம் சமூக பொலிஸ் பிரிவின் ஒத்துழைப்போடு இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதோடு இதற்கு ஒத்துழைப்பு வழங்காத வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.


அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற் திட்டத்துக்கு பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன் வர வேண்டும் என புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மேலும் தெரிவித்துள்ளார்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال