JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக NPPயின் ரின்சாட் மற்றும் முதலாவது பிரதி மேயராக SJBயின்‌ நுஸ்கி நிஸார் : வதந்திகளை பரப்ப வேண்டாம்

புத்தளம் மாநகர சபைக்கான கன்னி அமர்வு இன்றைய தினம் (16) மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.


இதன்போது புத்தளம் மாநகர சபைக்கான‌ முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொறியாளர் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.


பிரதி மேயருக்கான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுஸ்கி நிஸார் மற்றும் விஜித பிரசன்ன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் 10 : 06 என்ற அடிப்படையில் நுஸ்கி நிஸார் புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.


இந்நிலையில் பிரதி மேயராக தெரிவான  நுஸ்கி நிஸார்‌ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக எமது செய்தியாளர் அவரிடம் வினவிய போது, அவர் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் தான் என்று எம்மிடம்  தெரிவித்தார்.


எனவே இது தொடர்பாக எவரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال