JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரின் இரு ஆசிரியர்கள் புத்தளம் மத்தியஸ்த சபைக்கு நியமனம்.

எம்.யூ.எம். சனூன்

நீதி அமைச்சு மற்றும் மத்திய சபைகள் ஆணைக்குழுவினால் புத்தளம் நகரை சேர்ந்த இரு ஆசிரியர்கள் புத்தளம் மத்தியஸ்த சபை உறுப்பினர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.


புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை உதவி அதிபர் எம்.எஸ்.எம்.ஹிஷாம் புத்தளம் மத்தியஸ்த சபைக்கான உதவி தலைவராகவும், முன்னர் புத்தளம் இந்து மத்திய கல்லூரியில்  சேவையாற்றி, தற்போது புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சேவையாற்றி வரும் ஜே.இஸட்.எம்.நாஸிக் புத்தளம் மத்திய சபைக்கான உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில் சித்தியடைந்து மத்தியஸ்த சபைக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் (14) இடம்பெற்ற போது இவ்விரு ஆசிரியர்களும் தமக்கான நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.


இவ்விரு ஆசிரியர்களும் அகில இலங்கை சமாதான நீதிவான்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال