JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் புதன்கிழமை (25) நியமிக்கப்பட்டுள்ளார்.


குறித்த நியமனம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்  பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பெருக்குவற்றான் ஜும்ஆப் பள்ளி நிர்வாகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் இந்நியமனமா வழங்கப்பட்டுள்ளது.


பெருக்குவற்றான் பாடசாலையில் அதிபராக கடமை புரிந்து  அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற எஸ். எச். தமீம் அன்சாரின் வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال