JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தின நிகழ்வுகள்

நூருல் ஹுதா உமர் 

சர்வதேச சிறுவர் தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா அவர்களின் வழிகாட்டலுக்கமைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களது ஒருங்கினைப்பில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலயத்தை மையப்படுத்தி இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


முதலாம் கட்டமாக மாணவர்களையும், பொதுமக்களையும் மையப்படுத்தி விழிப்புணர்வு நடை பவனி பாடசாலையை அண்டிய வீதியினுடாக சந்தை பகுதியை ஊடறுத்து சென்று பதாதைகள் மூலமாகவும் துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கியமான விடயம் சந்தை பகுதியினை அண்டியதாக இந் நடை பவனி மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும். 


இரண்டாம் கட்டமாக  இன்றைய தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், சிறுவர் தொழிலாளர்கள் என்றால் யார்? எவ்வாறு அவர்கள் தொழிலுக்கு உட்படுத்தபடுகின்றார்கள்? ஆபத்தான 51 தொழில்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை தொடர்பாக விரிவான விளக்கம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், முறைசார கல்வி இணைப்பாளர் எம்.எம். சியாம் ஆகியோரினால் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வு அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் அர்பணிப்பான முன்னெடுப்பினால் சகல விடயங்களையும் முன்னின்று மேற்கொண்டிருந்தமையுடன் பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டமைக்காக பிரதேச செயலகம் நன்றியை தெரிவித்து கொண்டனர். 


இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கிராம நிலதாரிகள், நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال