JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி மஸ்ஜிதுர் றஹ்மான் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி மஸ்ஜிதுர் றஹ்மான் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) அதன் தலைவர் எம்.ஏ.எம் இக்மால் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வின் அதிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை போனஸ் உறுப்பினர எஸ்.எச் முஸம்மில், மஸ்ஜிதுர் றஹ்மான் உப தலைவர் எச்.ஏ.எம் பர்ஷான், பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.டி.எம் பரீத்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேற்படி நிகழ்வு பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களான எம்.ஐ.எப் சஹானா மற்றும் எம்.எஸ் சஜானஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சிறார்களின் இணைபாடவிதான செயற்பாடுகளை நோக்காக கொண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال