JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அந் நூர் பாலர் பாடசாலையின் 37 வது வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அந் நூர் பாலர் பாடசாலையின் 37 வது வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) பாலர் பாடசாலை வளாகத்தில் அதிபர் எஸ்.எம் அரூசியா உம்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந் நிகழ்வில்  அதிதிகளாக அகில  இலங்கை ஜம்மியத்துல் உலமா கற்பிட்டி கிளையின் செயலாளரும் புதுப் பள்ளியின் பேஷ் இமாமுமான அஷ்ஷெய்க் மிக்தாத் (ரஹ்மானி) மற்றும் அந் நூர் பாலர் பாடசாலையின் செயலாளர் எம்.ஏ.எம் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறார்களின் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் போன்ற இணை பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு வருடாந்தம் இடம்பெறும் சிறுவர் சந்தை நிகழ்வு 37 வது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றதாகவும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் மற்றும் பாலர் பாடசாலையின் உதவி அதிபர் எம்.எப் திப்னா பானு ஆசிரியர்களான ஏ.எப் அம்னா, எஸ்.எப் சுமையா, ஏ.எஸ்.எப் றீஹா ஆகியோருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் எஸ் எம் அரூசியா உம்மா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال