JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு சவூதி பூரண ஒத்துழைப்பு வழங்கும் - சவூதி தூதுவர் உறுதி

 (ரிஹ்மி ஹக்கீம்)

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹுமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (27) சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.


இது தவிர, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால முதலீடு மற்றும் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 


இதன்போது சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று தூதுவர் அல் கஹ்தானி தெரிவித்தார்.


சவூதி அரேபியா நீண்டகாலமாக இலங்கையுடன் பேணும் நட்பு மற்றும் ஒத்துழைப்புக்களுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال