JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி புதுக்குடியிருப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மகத்தான வரவேற்பு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபை தேர்தலில் புதுக்குடியிருப்பு, டச்பே, முகத்துவார கிராமங்களை உள்ளடக்கிய பள்ளியாவத்தை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  சார்பாக மரச் சின்னத்தில் களம் இறங்கி இருக்கும் இளம் துடிப்பான வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலுக்கு  புதுக்குடியிருப்பு கிராம மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.


கடந்த திங்கட்கிழமை (14) புதுக்குடியிருப்பு கிராமத்து பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி வரவேற்பு நிகழ்வில்  கற்பிட்டி நகர தலைமை வேட்பாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில் மற்றும் பட்டியல் வேட்பாளர் எம்.டி றிப்கான் ( றஹ்மானி) ஆகியோருடன்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال