JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த ஹாஜியானி சஹீதா பீவி அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகக் கொணட மரஹும் ஹனீபா மாஸ்டர் அவர்களின் அன்பு மனைவி ஹாஜியானி சஹீதா பீவி அவர்கள் இன்று (25) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் அன்பு மகளும், நிஹார், இம்தியாஸ், இர்சாத் மௌலவி (கபூரி,மதனி) இப்திகார், றிஸ்பியா, றிஸ்வான், றிஸ்லி ஆகியோரின் அன்புத் தாயாரும், மரஹும் மஹ்ரூப், ஹில்மியா, நஜீரா (ஆசிரியை - பு/நல்லாந்தழுவை மு. ஆ. பாடசாலை), முனவ்வரா, முத்தலிப் மெலவி (ரஹ்மானி), சிபானா, றிஸ்மியா ஆகியோரின் அன்பு மாமியாரும், சஹீத் மௌலவி, சம்சுதீன், அப்துல் வாஹித், பதூர்தீன் மௌலவி, பஸீர், ஜன்னத்து பீவி, மர்ஹும் றஸீனா  ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் இன்று (25) இஷாத் தொழுகையுடன் கனமூலை பெரிய பள்ளியில் ஜனாஸா தொழுகை இடம்பெற்று கனமூலை நாவற்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال