JobVibe.lk - Sri Lanka Job Portal

நிந்தவூர் ஸ்டென்போர்ட் கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

உயர் கல்வித்துறையின் முன்னோடியான நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஸ்டென்போர்ட் (Stanford) கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு இம்முறையும் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஸ்டென்போர்ட் (Stanford) கல்லூரியின் பணிப்பாளர்களான இஸ்மாயில் இஹ்ஸாஸ், நஜாத் ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்த இப்தார் நிகழ்வில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டென்போர்ட் (Stanford) கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் வெற்றியீட்டிய முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, கல்லூரியில் Q's வகுப்புக்களைத் தொடர்கின்ற மாணவர்களின் ரீ-சேர்ட் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில், சர்வமதப் பெரியார்களும் கலந்து கொண்டதுடன் கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் என 500 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஹுதாப்பள்ளிவாசல் பேஸ் இமாமும் ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் செயலாளருமான மௌலவி எம்.எச்.எம். நப்ராஸ் (றஹ்மானி) இப்தார் பற்றிய விசேட சொற்பொழிவை நிகழ்த்தினார்.


நிகழ்வில் தலைமையுரையை கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர்களில் ஒருவரான நஜாத் நிகழ்த்தியதோடு, நன்றியுரையை மற்றுமொரு முகாமைத்துவப் பணிப்பாளர் இஸ்மாயில் இஹ்ஸாஸும் நிகழ்த்தினார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال