JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கணிதப்பாட இலவசக் கருத்தரங்கு

புத்தளம்  கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் களுக்கான கணிதப் பாட இலவசக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (09) பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் இடம்பெற்றது. 


இக்கருத்தரங்கின் வளவாளராக திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் என்.ஏ  அகில் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் அதிபர் பீ.எம் முஸ்னி, பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் எம் இஸ்வான் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.


மேலும் இக்கருத்தரங்கிற்கு எச்.எச் நிஸாம்தீன் மற்றும் எம் பர்ஸாத் ஆகியோர் இணைந்து அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال