JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜம்மிய்யதுல் உலமா கிளை மற்றும் எருக்கலம்பிட்டி பிரைம் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கினங்க அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பூரண அனுசரணையுடன், புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் கடந்த சனிக்கிழமை (18) பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்.


இவ் வைத்திய முகாமில் ஆயுர்வேத வைத்திய குழாம் மூலம் பொதுமக்களுக்கு இலவச வைத்திய ஆலோசனைகளும், மருந்துகளும்  வழங்கி வைக்கப்பட்டதுடன் தொற்று நோய்கள் தொடர்பாக நோயாளிகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விஷேட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் குறித்த வைத்திய முகாமில் இலவச மருத்துவ உதவிகளை பெற்றுக் கொண்டதுடன் குறித்த இலவச வைத்திய முகாமிற்கு ஊரின் சிவில் அமைப்புக்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال