JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட சாகித்திய கலை விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன் "கலாதினீ" விருது வழங்கி கௌரவிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை  ஆனமடுவயின் மறைந்த கலைஞர்  எழுத்தாளர்  ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ  என்ற  மகுட வாசகத்தின் அடிப்படையில் ஆனமடுவ சுதம்பாய  மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29)  புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம் எஸ் பீ ஹேரத் தலைமையில் இடம்பெற்றது  


இதில் புத்தளத்தில் ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம் சனூன் கலாதினீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.


இச் சாகித்திய விழாவில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நீண்ட நாட்களாக சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம் யூ எம் சனூன், ஜே. ஏ.ஆர்.சீ பெர்னார்ந்துபுள்ளே, பத்மா குமாரி, ரெக்ஸ் ஹெரிஸன் பெர்னாந்து ஆகியோருடன்  கலைத்துறையில் சாதனையாளர்கள் ஆகியோர் கலா தினி விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال