JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம்.முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும் புத்தளம் நகரின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம்.முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறுவர் தினமான செவ்வாய்க்கிழமை (01) காலை இடம்பெற்றன.


முன்பள்ளியின்  பொறுப்பாசிரியை ரூசி சனூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இங்கு கல்வி பயிலும் சுமார் 25 மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள்.


அன்றைய தினம் மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியை அவர்களினால் சிறுவர் தினம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு ஆசிரியையுடன் இணைந்து பாடசாலையிலே சிறுவர் தினத்தை கொண்டாடினர்.


"நாளைய தலைவர்கள் நாம், எம்மை பாதுக்காக்க முன்வாருங்கள்" என்பது ஐ.எப்.எம். முன்பள்ளியின் இவ்வருட சிறுவர் தினத்தின் கருப்பொருளாகும்.


நிகழ்வின் இறுதியிலே அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் ஆசிரியையினால் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


முன்பள்ளிக்கு வருகை தந்த சில பெற்றார்கள் மாணவர்களுக்கு தூய பால் பக்கட்டுகளையும், அன்பளிப்பு பொருட்களையும் மேலதிகமாக வழங்கி மகிழ்வித்தனர்.

































Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال