JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற வேட்பாளர்களான தாஹிர், நியாஸ் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும் மக்கள் கோரிக்கை.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்).  

கற்பிட்டி பிரதேசம் பள்ளிவாசல்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ் எச் எம் நியாஸ் மற்றும் என் டி.எம் தாஹீர் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர்.      


இருவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் போது இருவரும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள் தலைமைகள் பிரிந்து சென்றாலும் கற்பிட்டி பிரதேசம் என்ற வகையில் இருவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து இத்தேர்தலில் பயணிக்கும் போது கற்பிட்டி பிரதேச மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக மேலும்  தெரிவித்தனர்.  


இதில் ஊரில் உள்ள இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال