JobVibe.lk - Sri Lanka Job Portal

கொட்ராமுல்லையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் போத்தல்கள் வழங்கிய பாராளுமன்ற வேட்பாளர் நியாஸ்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்). 

நாட்டில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக நாட்டின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் கொட்ராமுல்லை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது   


இவர்களின் வீடுகள் மழை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளமையினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையை கள விஜயம் மேற்கொண்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எஸ்.எச்.எம் நியாஸிடம் சுட்டிக்காட்டப்பட்டது.


அவசரமாக  செயற்பட்ட அவர் கொட்ராமுல்லையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் ஒரு தொகையை கொட்ராமுல்லை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال