JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி இரு போட்டிகளில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு தகுதி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்).   

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


அனுராதபுரத்தில் 11 மற்றும் 12 ம் திகதிகள் இடம்பெற்ற இப்போட்டிகளில் தேசிய ரீதியில் பலம் பொருந்திய மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலையின் உதைபந்தாட்ட அணியை 2 : 1 என்ற கோல் கணக்கிலும் கிழக்கு மாகாணத்தில் செம்பியனாக திகழும் கிண்ணியா மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணியை 2: 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளதாக விளையாட்டு பொறுப்பாசிரியர் கே.எம் றிஷாத் தெரிவித்துள்ளதுடன் பாடசாலையின் நிராவாக்குழு சார்பாக உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் தமது வாழ்த்துக்களை பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال