JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பாலக்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன், ஏ.எம் முஸ்பீக்)


கற்பிட்டி பாலக்குடா பகுதியிலிருந்து தலவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் தலவில் பகுதியிலிருந்து பாலக்குடா நோக்கி வருகைத் தந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு பாலக்குடா தலவில் பிரதான வீதியில் இடம்பெறூள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வயது சிறுமி உற்பட இருவர் புத்த்ளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதன்போது கற்பிட்டி வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் கற்பிட்டி தலவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய எஸ்.கே.சி ரனீஸ்க குரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال