JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கம்  ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உலவள ஆலோசகரும் பாலர் பாடசாலை மாணவர் அபிவிருத்தி உத்தியோகத்தருமான நிப்ராஸின் நெறிப்படுத்தலில் கற்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவியின் தலைமையில் கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில்   சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது .


இதில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம உத்தியோகத்தர் பீ.எம் பைனஸ், நிர்வாக உத்தியோகத்தர் மர்ஜானா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தி லதா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிபுனிகா பெர்ணான்டோ, இளைஞர் சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான ஏ.ஆர்.எம் முனாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்லினா மற்றும் அமானா வங்கி புத்தளம் கிளையின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தமது ஆற்றல்களை கலை நிகழ்ச்சிகள் ஊடாக வெளிப்படுத்தியதுடன்  சகல பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் அமானா வங்கியின் புத்தளம் கிளையின் அனுசரணையில் பரிசு பொதிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال