JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் சர்வதேச தபால் தின நிகழ்வுகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

ஒக்டோபர் 09ஆம் திகதி, உலக தபால் தினத்தை முன்னிட்டு, புத்தளம் பிரதான தபால் அலுவலகத்தில் விசேட நிகழ்வுகள் புதன்கிழமை (09) காலை இடம்பெற்றன. 


தபால் நிலையத்தின் பிரதான தபால் அதிபர் பௌசுல் அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில அலுவலக உயர் அதிகாரி குணரத்ன, சிற்றூழியர்களுக்கான பொறுப்பதிகாரி நகீப் மற்றும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தபால் சேவககர்கள் கலந்து சிறப்பித்தனர். 


இவ்வைபவத்தில், தபால் சேவையில் கடமையாற்றி மரணித்த மற்றும் கடமையாற்றும் உறவுகளின் விதவைத் தாய்மார்களுக்கு, உலர் உணவு பொதிகளும்  வழங்கி வைக்கப்பட்டன.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال