JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த முஹமமது ஹனீபா அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்கலான அலி தம்பி, தங்கச்சி உம்மா அவர்களின் அன்பு மகன் (ATM) முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று (17) காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற சுலைஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும்,  மர்ஹூம்களான  முஸ்தபா, செய்னுல் ஆப்தீன், முஹம்மது முத்து ஆகியோரின் சகோதரரும் மர்ஹூமா பரீதா உம்மா,  பௌஸியா, பைஸல், ஆகியோரின் அன்பு தந்தையும், மர்ஹூம்கலான ஹுஸைன், இஸ்மாயில். நிஹாரா ஆஹியோரின் மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17) அஸர் தொழுகையுடன் விருதோடை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

மகன்  பைசல்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال