JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி, புத்தளம் பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம்.சனூன்)

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 03ஆம் திகதி  முதல் கற்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளில் தபால் அலுவலகர்கள்  மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கான வாக்காளர் அட்டைகள், மாவட்ட தேர்தல் திணைக்களம் மூலம்  தபால் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


வாக்காளர் பெயர் பட்டியலில் உங்களின் பெயரை இலகுவாக தேடிக்கொள்வதற்கு, உங்களின் கிராம சேவகர்கள் மூலம், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு பற்றுச் சீட்டை, உங்கள் வீடுகளுக்கு வரும், தபால் அலுவலர்களிடம் காண்பித்தால், சிரமமின்றி மிக இலகுவாக வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال