JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கொத்தாந்தீவைச் சேர்ந்த அல்ஹாஜ் நிசாம்தீன் அவர்கள் காலமானார்.

கொத்தாந்தீவைச் சேர்ந்த மர்ஹும்களான உசன், ரஹ்மத்தும்மா ஆகியோரின் அன்பு மகன் அல்ஹாஜ் நிசாம்தீன் அவர்கள் இன்று (02)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் செய்தூன் உம்மாவின் அன்புக் கணவரும், சலீம், நிஸ்ரா, நஸ்ரா ஆசாரியை (கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்) , சப்னா ஆசிரியை (பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அதிபர் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரி - புத்தளம்), அனஸ், பமீம், ரலீபா ஆசிரியை ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (02) இரவு 9.00 மணிக்கு கொத்தாந்தீவு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,



"اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدْ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَما نَقَّيْتَ الثَّوْبُ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ."


எங்கள் இறைவா! இவரை மன்னிப்பாயாக!


இவருக்கு அருள் புரிவாயாக!


இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!


இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக்குவாயாக ! 


இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 


இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 


வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! 


இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும் இவருக்கு வழங்குவாயாக!


எங்கள் ரப்பே...

இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!


இவரது பிரிவால் துயருரும் அனைவருக்கும் ஆறுதலையும் பொறுமையையும் தைரியத்தையும் வழங்குவாயாக!!!


ரப்பே, ரஹ்மானே

இவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக.....


தகவல்- அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம்.எப் பாரிஸ் (நளீமி)




Previous Post Next Post

نموذج الاتصال