JobVibe.lk - Sri Lanka Job Portal

வடமேல் மாகாண "இசையும் அசைவும்" நிகழ்ச்சியில் நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவி சீ.டி.மேர்ஸி லியோறா முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

வடமேல் மாகாண தமிழ் தின போட்டிகளின் "இசையும் அசைவும்" நிகழ்ச்சியில் பங்கேற்ற கற்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தைச்  சேர்ந்த மாணவி சீ.டி.மேர்ஸி லியோறா முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 


இந்த வெற்றியின் மூலம் இந்த மாணவி அடுத்து வரும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தமிழ்த்தினப் போட்டிகள் வியாழக்கிழமை (19) காலை குருநாகல் தெலியாகொன்னை ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.


இந்த மாணவிக்கு நீண்ட காலமாக பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி ஏ.ஆர்.எம்.ஏ.வினோஜினிக்கும்,ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் பீ.ஜெனட்ராஜ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال