JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த முஹம்மது சாலிபு அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த நாகூர் பிச்சை ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகன் முஹம்மது சாலிபு அவர்கள் இன்று (03)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ரைஹானா பீவி அவர்களின் அன்புக் கணவரும், அனிபா, சைத்தூன், நாகூர் உம்மா மற்றும் மர்ஹும்  சுலைஹா, சபியா ஆகியோரின் அன்புச் சகோதரரும், நியாஸ் அவர்களின் அன்புத் தந்தையும், ஹாமிலா அவர்களின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (03) அஸர் தொழுகையுடன் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال