JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மாட்டு வண்டில் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை (06) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


புத்தளத்தில் பாரம்பரியமான இந்த விளையாட்டுப் போட்டிகள் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றன.


மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், மாட்டுரிமையாளர்கள் மற்றும் இதர வாலிபர்களை உள்ளடக்கிய ரெக்லா என்கின்ற இந்த விளையாட்டு கழகத்தினர், ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் 04 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார்கள்.


கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தெரிவு போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டிகளே  வெள்ளியன்று  நடைபெறவுள்ளன.


அரை கரத்தை, ரேஸ் கரத்தை, குதிரை ஓட்டம் மற்றும் மாட்டு வண்டிகளின் திறந்த போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளன.


போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும், வழங்கி வைக்கப்படவுள்ளன.


புத்தளம் ரெக்லா விளையாட்டு கழக தலைவர் ஏ.டபில்யூ.அப்துல் வாரிஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல விஷேட அதிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.







Previous Post Next Post

نموذج الاتصال