JobVibe.lk - Sri Lanka Job Portal

கப்பலடி பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக மாணவி மின்ஹாஸ் பாத்திமா ஹம்னா தமிழ்மொழி தின பாவோதல் வலய மட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம் யூ. எம் சனூன்)

கப்பலடி பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக  வலய மட்ட தமிழ் மொழி தின பாவோதல் போட்டியின் முதலாம் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று கப்பலடி அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில்  தரம் 04 ல் கல்வி பயிலும் மாணவி மின்ஹாஸ் பாத்திமா ஹம்னா வரலாற்றுச் சாதனை  படைத்துள்ளார். இம்மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர் ஏ.டி.எப் ஜெஸ்ரினாவிற்கும் மாணவிக்கும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலையின் அதிபர் எம்.ஜீ எம் சறூக் தெரிவிக்கின்றார்.


இவர் கண்டக்குடாவைச் சேர்ந்த  எச்.யூ மின்ஹாஸ் மற்றும் கப்பலடியைச் சேர்ந்த எஸ்.எப்  பாரீஸா தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال