JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது க்குட்பட்டோருக்கான காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணி வெற்றி.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது க்குட்பட்டோருக்கான காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


ஓரிரு வாரங்களுக்கு முன்பு பிரிதொரு வடமேல் மாகாண காற்பந்தாட்ட போட்டி தொடரில் 16 வயதுக்குட்பட்ட சம்பியனாகி அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி நிலையில் உள்ள புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் அணியினரை தோல்வியடைய செய்தே புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.


புத்தளம் பிராந்திய மட்டத்தில் இவ் இரு அணிகளுமே விண்ணப்பித்திருந்ததால் இறுதி போட்டியாகவே இந்த ஆட்டம் நடைபெற்றது.


இந்த போட்டியானது வியாழக்கிழமை (15) காலை

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இரண்டு அணிகளுமே புத்தளம் நகர அணிகள் என்பதாலும் இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதாலும் போட்டி மிகவும் கடுமையாக அமைந்திருந்தது.


போட்டியின் இரண்டாம் பாதியில் வெட்டாளை அஸன் குத்தூஸ் அணி வீரர் முஹம்மது இர்பான் தனது அணிக்காக முலாவது கோலினை புகுத்தினார்.


எனினும் தொடர்ச்சியாக முயற்சித்த ஸாஹிரா அணியின் வை.எம்.ரிலான் முதலாவது கோலினை புகுத்தி சமனிலை படுத்தினார்.


சாஹிராவின் அடுத்தடுத்த விடா முயற்சியால் நிலை குலைந்திருந்த அசன் குத்தூஸ் அணியினருக்கு அதிர்ச்சி கோலினை ஸாஹிரா அணி வீரர்  கே.ஆர்.பர்வீஸ் செலுத்தி ஸாஹிராவின் வெற்றியை உறுதி செய்தார்.


இதன் அடிப்படையில் 02 : 01 என்ற கோல் கணக்கில் ஸாஹிரா அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 


ஸாஹிரா அணியை  பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் பீ.ரோய்  வழி நடாத்தி இருந்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال