JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப நிகழ்வு

(எம். யூ. எம். சனூன்)

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 2024 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் வித்தியாரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் அருட் சகோதரி ஜேனட் ரொட்ரிகோ புள்ளே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் புத்தளம் வலய கல்வி பணிமனையின் பாட இணைப்பாளர் எம்.முஹம்மது அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.


இதன் போது புதிய மாணவர்கள் மலர் செண்டுகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال