Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது ஹுஸைனியாபுரம் இல்மியாபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மௌலவி சல்பிகாண் (இல்மியா அரபுக் கல்லுரியின் அதிபர்) காலமானார்.

மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது ஹுஸைனியாபுர  இல்மியாபுரத்தை வசிப்பிடமாக கொண்ட அப்துல் கதீர் மற்றும் உலிதா பேகம் தம்பதிகளின் மூத்த மகனான மௌலவி சல்பிகாண் (இல்மியா அரபுக் கல்லுரியின் அதிபர்) காலமாகி விட்டார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிவூன்.


அன்னார் காலிதா பேகம் என்பவரின் அன்புக் கணவரும், நஸ்ரி அஹமட் (ஹாபிழ்), (மெளலவியா) சுமையா, (மௌலவியா) ஆயிஷா, (ஹாபிழ்) முஹமட் ஆகியோரின் அன்புத் தந்தையும், 


மேலும் அன்னார் முஹமட் சவூதி, முஹமட் கசீப், முஹமட் ஹாபிஸ், முஹமட் பைசல் ஆகியோரன் அன்பு சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றைய தினம் இஷா தொழுகையின் பின்னர் கரம்பை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار



தகவல்

மகன் நஸ்ரி அஹ்மத்





No comments

note