JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த அப்துல் காஸிம் அவர்கள் காலமானார்.

மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காதர் மொஹிதீன், ஹாஜியினி பாத்து முத்து தம்பதியினரின் அன்பு மகன் அப்துல் காஸிம் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்ற அல்ஹாஜ் ஹமீது ஹுசைன், மைமூனாச்சி ஆகியோரின் அன்பு மருமகனும், சம்ரூஸ் உம்மா அவர்களின் அன்புக் கணவரும், இர்பான், சிபான், சிபாயா, றிஸ்வானா ஆகியோரின் அன்புத் தந்தையும், தாஜுதீன், இஸ்மத், றிஸானா, அப்ரத்நிஸா, ஆகியோரின் அன்பு  மாமனாரும், அல்ஹாஜ் அப்துல் ஜப்பார், நஸார்தீன், சித்தி ஹயரா, றபீலா உம்மா ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (12) காலை 10.00 மணியளவில் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

மகன் இர்பான்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال